வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 ஜூன் 2023 (17:56 IST)

எங்கள் ஆட்சியில் அதிகாரி அறையில் சோதனை, உங்கள் ஆட்சியில் அமைச்சரின் அறையில் சோதனை: அதிமுக

எங்கள் ஆட்சியில் அதிகாரி அறையில் தான் சோதனை நடந்தது ஆனால் உங்கள் ஆட்சியில் அமைச்சரின் அறையில் சோதனை நடைபெறுகிறது என அதிமுக ஐடி விங் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது: 
 
அதிமுக ஆட்சியில் மேடை தோறும் தலைமை செயலகத்தில் நடந்த ரெய்டு குறித்து வீராவேசமாக முழங்கிய முதல்வர்  ஸ்டாலின் அவர்களே! 
 
எங்கள் ஆட்சியிலாவது தலைமை செயலகத்தில் அதிகாரியின் அறையில்தான் வருமான வரித்துறை சோதனை  நடந்தது, 
 
ஆனால் இன்று உங்கள் ஆட்சியில் உங்கள் அமைச்சரின் அலுவலகத்திலேயே சட்டத்துக்கு புறம்பான பணப்பரிமாற்றம், நேரடி ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அமலாக்கத்துறையின்  சோதனை நடக்கிறதே….இப்போது மக்களுக்கு தெரியவரும் முதுகெலும்பில்லாதவர் யார் என்று…!
 
இதற்கு பழிவாங்கும் நடவடிக்கை என சப்பைக்கட்டு கட்டுவீர்களா அல்லது மேற்கு வங்க முதலமைச்சர் போல துணிந்து எதிர்ப்பீர்களா? 
 
Edited by Siva