திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 ஜூன் 2023 (15:54 IST)

7 வருடங்களுக்கு முன் தலைமை செயலகத்தில் சோதனை.. அன்று ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?

TN assembly
கடந்த 2016 ஆம் ஆண்டு அதாவது ஏழு வருடங்களுக்கு முன் தலைமைச் செயலாளராக ராம் மோகன் ராவ் இருந்தபோது தலைமை செயலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 
 
அப்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் ’தலைமைச் செயலகத்தில் நடக்கும் சோதனைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் தற்போது சரியாக ஏழு வருடங்கள் சந்தித்து முதலமைச்சர் ஆக மு க ஸ்டாலின் இருக்கும் நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 
 
அன்று முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சொன்ன மு க ஸ்டாலின் இன்று முதலமைச்சராக இருக்கும் நிலையில் அதற்கு விளக்கம் அளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
 
Edited by Siva