அதிமுக முன்னாள் எம்.பி. செங்குட்டுவன் மரணம்
அதிமுக முன்னாள் எம்.பி. செங்குட்டுவன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 65.
வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். அதிமுக முன்னாள் எம்.பி. செங்குட்டுவன் மறைவுக்கு கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.