Daily Horoscope
✕

புதுசா ஒன்னு வரும்போது அதிர்வு வரும் - பன்ச் டயலாக் பேசிய தனுஷ்

Updated: சனி, 7 நவம்பர் 2026 (11:29 IST)
நடிகர் விஜயை தொடந்து நடிகர் தனுஷும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாகவே தொடர்ந்து தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். சமீபத்தில் கூட ரசிகர் மன்ற பெண் நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு காமாட்சி அம்மன் விளக்கை பரிசாக கொடுத்தார். அதில், தாமரை சின்னமும் இடம் பெற்றிருந்தது.

ஒருபக்கம், சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற தனுஷ் அங்கு சில ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்து பேசியதாக செய்திகள் கசிந்தது. மேலும், 2028ம் வருடம் அரசியல் வருகையை அறிவித்துவிட்டு 2031ம் வருட தேர்தலில் தனுஷின் அரசியல் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் ‘எனக்கு பின்னால் யாரோ இருப்பதாக பேசுகிறார்கள். அப்படி யாரும் இல்லை. என் பக்கம் ரசிகர்களும், மக்களும்தான் இருக்கிறார்கள். நான் என்ன பேசினாலும் எதாவது சொல்வார்கள். அதற்காக பேசாமலும் இருக்க முடியாது. புதிதாக ஒன்று உருவாகும்போது அதிர்வு இருக்கத்தான் செய்யும்’ என அவர் பேசியிருக்கிறார்.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

ஒரே ரீசார்ஜ்.. 3 ஆண்டுகள் வேலிடிட்டி!.. ஜியோ அறிமுகம் செய்யும் புதிய திட்டம்...

மணல் மோசடி!. துரைமுருகனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு....

ஆன்லைனில் ரூ.550 மதிப்புள்ள ஆடைக்கு ரூ.4.82 லட்சம் கட்டி ஏமாந்த பெண்... பொதுமக்கள் உஷார்!...

தேர்தலில் தோல்வி! - பிரதமர் பதவியை இழக்கும் நெதன் யாகு!...

பேத்தி திருமண சர்ச்சை - வருத்தம் தெரிவித்த துரை முருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments