வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified புதன், 23 நவம்பர் 2022 (22:05 IST)

ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்காத நடத்துநர்கள் மீது நடவடிக்கை!

மத்திய ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்ட  மற்ற  நாணயங்களைப் போன்றே  பத்து ரூபாய் நாணயமும் அச்சிடப்படுகிறது.

ஆனால், இந்த நாணயத்தை வாங்குவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் போக்குவரத்துத்துறை நடத்துனர்கள் தயக்கம்  காட்டுகின்றனர்.

மக்கள் எவ்வளவு தூரம் எடுத்துக் கூறினாலும், அதைக் கடைக்காரர்கள் தான் பொருட்படுத்தவில்லை என்றால், இந்த  அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் அந்த நாணயங்களை வாங்குவதில்லை.

இந்த நிலையில், அரசுப் பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்க மறுத்தால்,   பேருந்தின் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என போக்குவரத்துக் கழகம் இன்று எச்சரித்துள்ளதது.

Edited by Sinoj