வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (10:44 IST)

திமுகவுடன் ரகசிய உறவா? இரு கட்சிகளின் பாதையும் வேறு! - எடப்பாடியார் குற்றச்சாட்டுக்கு தமிழிசை கொடுத்த விளக்கம்!

ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக கலந்து கொண்டதன் மூலமாக பாஜகவுடனான ரகசிய உறவு வெளிப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி இருந்து வந்த நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட உரசல்கள் காரணமாக இரு கட்சிகளும் கூட்டணியிலிருந்து விலகின. அதன் பின்னர் அதிமுகவினர் தொடர்ந்து பாஜகவையும், அதன் திட்டங்களையும் விமர்சிப்பது தொடர்ந்து வருகிறது.

 

சமீபத்தில் நடந்து முடிந்த சுதந்திர தின விழா அன்று, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் திமுக பங்கேற்கப்போவதில்லை என அறிவித்திருந்த நிலையில், பின்னர் விருந்தில் முதல்வர் மு,.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர். மேலும் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கலைஞர் சிறப்பு 100 ரூபாய் நாணய வெளியீட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டார்.
 

 

இவற்றை சுட்டிக்காட்டி பேசியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இதன்மூலம் திமுக - பாஜக இடையேயான ரகசிய உறவு வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக பேசியிருந்தார். 

 

எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்து பேசியுள்ள தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் “திமுக மற்றும் பாஜக ஆகியவை தனித்தனி பாதைகளில் பயணிக்கும் கட்சிகளாகும். இரு கட்சிகளும் அரசு விழாக்களில் பங்கேற்பது என்பது தவிர்க்க இயலாதது. அதை கூட்டணிக்காகதான் என எடுத்துக் கொள்ள கூடாது” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K