வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (09:53 IST)

யானைகள் வழித்தடத்தில் சொகுசு விடுதிகள்! இடிக்க உத்தரவிட்ட மாவட்ட நிர்வாகம்!

Elephant

நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதிகளை இடித்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

 

 

நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகள் இயற்கை எழில்மிக்கவை, மட்டுமல்லாமல் யானைகளின் வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் மலைவாசஸ்தலங்களுக்கு பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் புதிதாக பல பகுதிகளில் விடுதிகள் கட்டப்படுகின்றன. 

 

அவ்வாறாக யானைகள் செல்லும் வழித்தடத்தில் விதிகளை மீறி விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை இடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுட்டிக்காட்டி 35 தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 15 நாட்களுக்குள் உரிய உரிமம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள விடுதிகளை இடித்து அகற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K