1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2024 (11:58 IST)

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

admk office
நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், மாவட்ட செயலாளர் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக   வெளியிட்டுள்ள அறிக்கையில் ’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் வருகிற ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தலைமை கழக செயலாளர் மாவட்ட கழக செயலாளர் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Edited by Siva