புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 ஜூன் 2018 (10:34 IST)

ஃபீஸ் கட்ட முடியலன்னா மாடு மேய்க்கப் போங்கடா - தலைமை ஆசிரியரின் திமிர் பேச்சு

ஸ்கூல் பீஸ் பட்ட முடியாட்டி மாடு மேய்க்க போங்க இல்ல கடை கடையா ஏறி முறுக்கு விக்க போங்கடா என ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் திமிர் தனமாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை உசிலம்பட்டி எஸ்.டி.ஏ பள்ளியில் மத்திய அரசின் இலவச கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சில மாணவர்கள் படித்து வந்தனர்.
 
இந்நிலையில் அந்த பள்ளிக்கு புதிதாக பொறுப்பேற்ற முதல்வர், தங்கள் பள்ளிக்கு மத்திய அரசிடம் இருந்து மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் வராததால், குறிப்பிட்ட அந்த மாணவர்களை வரக்கூடாது என கூறியிருக்கிறார்.
 
இருந்தபோதிலும் படிப்பின் மீது ஆர்வம் கொண்ட அந்த மாணவர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். அவர்களை பள்ளிக்குள் விடாமல் அந்த தலைமை ஆசிரியர் வெயிலில் நிற்க வைத்து கொடுமைப் படுத்தியுள்ளார். மேலும் பீஸ் கட்ட முடியாத நீங்க எல்லாம் ஏன் டா ஸ்கூலுக்கு வரீங்க? பேசாம போய் மாடு மேய்ங்க. இல்லனா கடை கடையா ஏறி போய் முறுக்கு விய்ங்க என்று திமிருடன் பேசியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த மாணவர்கள், இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவிடம் புகார் அளித்தனர். மாணவர்களின் புகாரைப் பார்த்து அதிந்துபோன கலெக்டர், பள்ளி தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளார்.