திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 6 ஜூன் 2018 (15:48 IST)

நண்பர்கள் வேறு பள்ளியில் சேர்ந்ததால் பிளஸ்-1 மாணவன் தற்கொலை

நண்பர்கள் வேறு பள்ளியில் சேர்ந்ததால் பிளஸ்-1 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். எதையுமே உடனடியாக அடைய வேண்டும் என்ற எண்ணம். அப்படி அவர்கள் நினைத்தது நடக்காவிடில், தற்கொலை செய்துகொள்ளும் தப்பான முடிவை எடுக்கின்றனர்.
 
இந்நிலையில் சென்னை கோயம்பேடு சீமாத்தம்மன் நகர் 8-வது தெருவைச் சேர்ந்த அப்பள வியாபாரியான ஆரோக்கியசாமியின் மகன் ஸ்டீபன்ராஜ் 11-ம் வகுப்பு புதிய பள்ளியில் சேர்ந்தார்.

அவருடன் 10 ஆம் வகுப்பு வரை படித்த அவரது நண்பர்கள் பிரிந்து வெவ்வேறு பள்ளியில் சேர்ந்னர். நண்பர்களை பிரிந்த ஸ்டீபன்ராஜ் சில நாட்களாக மனவேதனையில் இருந்தார்.
 
இந்நிலையில் ஸ்டீபன்ராஜ், வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஸ்டீபன்ராஜின் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.