வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 23 ஜூன் 2018 (08:14 IST)

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: ஆதார் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு நடந்து வரும் நிலையில் தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற மாநிலத்தவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ஏழு பேர் சேர்ந்து தொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். சேர்க்கை பெற்ற மாணவர்கள், வேறு மாநிலங்களில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனரா? என்பதை கண்டறிந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசுக்கு அவர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
 
ஆனால் இதற்கு பதிலளித்த மத்திய அரசு, 'இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் ஆய்வு செய்வது கடினம் என்றும், அதனால் தென் மாநிலங்களில் மட்டும் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதாகவும் கூறியது
 
இதையடுத்து, இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் ஆதார் அட்டை கட்டாயம் காண்பிக்கப்படவேண்டும் என்றும் அதில் இருந்து வெளிமாநில மாணவர்களை அறிந்து கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.