1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 ஜூன் 2018 (13:43 IST)

'சாட்டை' ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்: பாசப்போராட்டம் வெற்றி

சமுத்திரக்கனி இயக்கிய 'சாட்டை' படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவரின் பணியிட மாற்றத்தால் அந்த பள்ளியின் மாணவர்கள் கதறி அழுதனர் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம். 
 
இந்த நிலையில் மாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. ஆம், திருவள்ளூரை அடுத்துள்ள வெளியகரம் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த பகவான் என்பவரின் பணியிட மாறுதல் உத்தர்வை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் என்பவர் கூறியுள்ளார்.
 
இதனால் ஆசிரியர் பகவான் மீண்டும் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக தொடர்கிறார். இதனையறிந்த அந்த பள்ளி மாணவ, மாணவியர் துள்ளி குதித்து தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர். ஆசிரியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆசிரியர் பகவானுக்கு சமூக இணையதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.