செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (19:05 IST)

சென்னையின் 2வது விமான நிலையத்திற்கு புதிய சிக்கல்..!

airport
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளி வந்த நிலையில் அந்த விமான நிலையத்துக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
 
 காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் என்ற கிராமத்தில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த பகுதிக்கு உட்பட்ட 6 கிராமங்கள் மற்றும் சிறு குறு தாலுகாவுக்கு உட்பட்ட 6 கிராமங்களில் 32 கிராமங்களில் 4650 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது
 
 ஆனால் இந்த பகுதியில் உள்ள சில கிராம மக்கள் தங்கள் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக இரண்டாவது விமான நிலையத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது