கத்தி, பிளேடால் தாக்கிக் கொண்ட ஷியா முஸ்லீம்கள்! – சென்னையில் பேரணி!
இன்று இஸ்லாமிய பண்டிகையான மொஹரம் கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் ஷியா முஸ்லீம்கள் பேரணி நடத்தினர்.
இஸ்லாமிய புனித மாதங்களில் ஒன்றான மொஹரத்தின் தொடக்கத்தை இன்று இஸ்லாமிய மக்கள் புனித பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் இஸ்லாமிய பிரிவினரான ஷியா மற்றும் சன்னி முஸ்லீம்கள் இருவேறு வகையாக கொண்டாடுகின்றனர்.
ஷியா முஸ்லீம்கள் நபிகளின் பேரன்களான இமாம் ஹசேன், இமான் ஹுசேன் ஆகியோர் போரில் இறந்த துக்க தினமாக இந்த தினத்தை அனுசரிக்கின்றனர். அதன்படி சென்னையில் பேரணி நடத்திய ஷியா முஸ்லீம்கள் கத்தி மற்றும் பிளேடால் தங்களை தாக்கிக் கொண்டு பேரணி சென்றனர்.