வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 அக்டோபர் 2018 (13:05 IST)

பெற்ற மகளை சீண்டிய தந்தை - நெல்லையில் கொடுமை

நெல்லையில் பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை அளித்த கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது.
 
பெண் பிள்ளைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கபடுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொடுமை என்னவென்றால் பல குழந்தைகள் பெற்றோர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
 
நெல்லை குன்னத்தூர் கரிக்காதோப்பைச் சேர்ந்தவர் கவந்தர்மஸ்தான். இவரது மகள் நெல்லியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
 
இந்நிலையில் கவந்தர்மஸ்தான் தினமும் குடித்துவிட்டு இரவில் பெற்ற மகள் என்றும் பாராமல் அவருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளான். இதனை வெளியே சொல்ல முடியாமல் மாணவி தவித்து வந்துள்ளார்.
 
சமீபத்தில் பள்ளிக்கூடத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதிகாரிகள் விசாரித்ததில் மாணவி அவரது தந்தையால் அனுபவித்து வந்த கொடுமைகள் பற்றி தெரியவந்தது.
 
இதையடுத்து போலீசார் கவந்தர்மஸ்தானை போக்சோ சட்டத்தில்  கைது செய்தனர். பெற்ற மகளை தந்தையே பாலியல் கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.