நான் என்ன புண்ணியம் செய்தேன்? பிக்பாஸ் 2 வின்னர் ரித்விகாவின் தந்தை நெகிழ்ச்சி
நேற்று நடைபெற்ற பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் இறுதியில் ரித்விகா பிக்பாஸ் 2 சீசனின் வின்னராக அறிவிக்கப்பட்டார். கமல்ஹாசன் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ரித்விகா.
ரித்விகா வின்னராக அறிவிக்கப்பட்டதும் அவருடைய பெற்றோர் மேடையேறினர். தனது மகள் வின்னரானது குறித்து அவரது தந்தை கூறியபோது, 'ரித்விகா போன்ற ஒரு மகளை பெற்றதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று தெரியவில்லை. அதைவிட உலகநாயகன் பக்கத்தில் நின்று பேசும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். என் மகளின் வெற்றிக்கு பெரும்பங்கு கமல்ஹாசன் அவர்களுக்கு உண்டு. அவருக்கு எனது நன்றி என்று ரித்விகாவின் தந்தை கூறினார்.
பிக்பாஸ் 2 பட்டத்தை வென்ற பின்னர் ரித்விகா கூறியதாவது, 'நான் பெற்ற முதல் முழு வெற்றி இது. ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது. இந்த பட்டத்தை வெல்ல எனக்கு என் சக போட்டியாளர்கள் பெரும் உதவியாக இருந்தனர். இந்த பட்டத்தை நான் அவர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கின்றேன்' என்று கூறினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் விஜய் டிவியின் மேனேஜிங் டைரக்டர் ரித்விகாவுக்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தார்.