ஏ.சியில் மின்கசிவு - சென்னையில் தாய், தந்தை, மகன் பரிதாப பலி

AC
Last Modified செவ்வாய், 2 அக்டோபர் 2018 (11:26 IST)
சென்னை கோயம்பேட்டில் ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவால் தாய், தந்தை, மகள் உள்ளிட்ட மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சரவணன். இவருக்கு கலையரசி என்ற மனைவியும், 8 வயதில் கார்த்திகேயன் என்ற மகனும் இருந்தனர்.
 
இந்நிலையில் நேற்றிரவு கார்த்திகேயன் ஏசி போட்டுவிட்டு தனது குடும்பத்தினருடன் தூங்கியுள்ளார். நடுஇரவில் கரண்ட் கட் ஆனதால் ஏ.சி, இன்வெர்டலில் ஓடியுள்ளது.
 
சற்றி நேரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் ஏ.சியில் இருந்து கரும்புகை வெளியாகி உள்ளது. இதனால் தாய், தந்தை, மகன் ஆகியோர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏ,சியை பயன்படுத்துவோர் அதனை கவனமாக கையாள வேண்டும் என ஏ.சி டெக்னீஸியன்கள் கூறுகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :