திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 14 மே 2019 (19:58 IST)

இந்து தீவிரவாதி குறித்த பேச்சு: கமல் மீது எப்.ஐ.ஆர் பதிவு

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி நீதிமன்றத்தில் கமல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் கரூர் மாவட்ட காவல்நிலையத்தில் கரூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ராமகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கமல் மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமகிருஷ்ணன் தனது புகார் மனுவில், 'கமல்ஹாசன் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் அவர்களுடைய ஓட்டுக்களை பெறுவதற்காக இந்து மக்களின் மனம் புண்படும்படி பேசியுள்ளதாகவும், அவரது பேச்சால் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரின் மனம் வேதனை அடைந்துள்ளதாகவும், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகை உணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு அவர் பேசியுள்ளதாகவும், எனவே கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
இந்த புகாரின் அடிப்படையில் கமல்ஹாசன் விசாரணை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தேவைப்பட்டால் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது