புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 14 மே 2019 (16:51 IST)

ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - கமல்ஹாசன் கட்சி கோரிக்கை

கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல் “இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பலவித கண்டனங்களை எழுப்பியுள்ளது. 

கமலின் பேச்சை கண்டித்து பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.ராஜா ஆகியோர் பேசியுள்ளனர். இதற்கிடையே “கமலின் நாக்கு அறுபடும்” என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுஇந்நிலையில்  சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “ கமலின் நாக்கு ஒருநாள் அறுபடும்” என மிரட்டும் தொனியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ராஜேந்திர பாலாஜி பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இன்று இதுகுறித்து விளக்கமளித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி  கூறியுள்ளதாவது :
 
“தமிழ்நாட்டில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அந்த ஒற்றுமையை குலைத்து வன்முறையை வளர்க்கும் விதத்தில் கமல் பேசி வருகிறார். 
 
இப்படியாக அவர் தொடர்ந்து பேசி வந்தால் மக்களே அவர் நாக்கை அறுத்துவிடுவார்கள் என்ற அர்த்தத்தில்தான் அவ்வாறு கூறினேன். இதில் எந்த விதமான மிரட்டலும் கிடையாது” என மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் கமல்ஹாசனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
.
மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளர் அருணாச்சலம் நிருபர்களிடம் கூறியதாவது, “அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அரசியல் மாண்பும், தனி மனித ஒழுக்கமும் இன்றி சட்டவிரோதமாக மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசியுள்ளார். இதனால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பதவி விலக வேண்டும்” என்று கூறினார்.
 
அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இந்த அடக்குமுறை போக்கை கண்டித்த விசிக தலைவர் திருமாவளவன் ” கமல்ஹாசனின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்க யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு. ஆனால் மிரட்டும் தோனியில் பேசுவது ஒரு அமைச்சருக்கு ஏற்புடையதல்ல.” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.