திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 27 ஜனவரி 2025 (15:28 IST)

தக்காளி 20 ரூபாய், தேங்காய் 80 ரூபாய்.. வரத்து குறைவால் உச்சத்திற்கு செல்லும் விலை..!

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 20க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஒரு கிலோ தேங்காய் ரூபாய் 80க்கு விற்பனையாகி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாகவே தேங்காய் வரத்து குறைந்து வருவதால், தேங்காய் விலை உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.  சில்லறை கடைகளில் ஒரு தேங்காய் ரூபாய் 20 முதல் 30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூபாய் 40 முதல் 50 வரை, கிட்டத்தட்ட இருமடங்கு விலையிலே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு 200 டன் அளவுக்கு தேங்காய் வரத்து இருக்கும் நிலையில், தற்போது வெறும் 70 டன் தேங்காய் மட்டுமே வருவதாகவும், இதனால் விலை கடுமையாக உயர்ந்து உள்ளதாகவும் தேங்காய் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்னும் சில மாதங்களுக்கு தேங்காயின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர். கடந்த மாதம் பெய்த மழை காரணமாக தென்னை மரங்கள் பெரும்பாலும் பூச்சியால் தாக்கப்பட்டதாகவும், இதனால் தேங்காய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேங்காய் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தேங்காயை விட இளநீருக்கு கூடுதல் விலை கிடைப்பதால், விவசாயிகள் இளநீர் காய்களை அதிக அளவில் வெட்டி விற்பனை செய்து வருவதால், தேங்காய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva