Daily Horoscope
✕

சென்னையில் கண்டெய்னர் லாரி மோதியதில் 2 வயது சிறுவன் உடல் நசுங்கி பலி

Updated: திங்கள், 21 மே 2018 (08:06 IST)
சென்னை காசிமேட்டில் கண்டெய்னர் லாரி மோதியதில் 2 வயது சிறுவன் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேடு அண்ணாநகரை சேர்ந்தவர் வினோத். இவருக்கு திருமணமாகி அபிஷேக்(2) என்ற மகன் உள்ளார். அபிஷேக் நேற்று மாலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.
 
அப்போது அங்கே வந்த கண்டெய்னர் லாரி  சிறுவன் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானான். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், டிரைவரை சரமாரியாக தாக்கினர். மேலும் லாரியை அடித்து நொறுக்கினர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டிரைவரை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் - அகல் விளக்கு உரிமையாளர் கைது

இனிமேல் எல்லா டாஸ்மாக்கிலும் கூலிங் பீர்!.. மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி...

நவம்பர் 20-ஆம் தேதி முதல் சொகுசு சுற்றுலா கப்பல் இயக்கம்.. 150 பயணிகள் பயணம் செய்யலாம்...

ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு.. பள்ளிக்கல்வி துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள்

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை! - நிஷாந்த் சிக்கியது எப்படி?...

அடுத்த கட்டுரையில்
Show comments