புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 27 ஜூலை 2018 (13:43 IST)

13வயது சிறுமியை தொடர்ந்து துரத்திய 60வயது சப்-இன்ஸ்பெக்டர் கைது

திருநின்றவூர் அருகே 13 வயது சிறுமியை விடாமல் துரத்தி தொந்தரவு செய்த 60 வயது ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

 
திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த 13வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஒருநாள் பள்ளி சென்ற சிறுமியை 60வயது முதியவர் ஒருவர் வழிமறித்து, என்னுடன் வா 5000 ரூபாய் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
 
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்து ஓடியுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். மறுநாள் பெற்றோர்கள் சிறுமியுடன் பள்ளி சென்றுள்ளனர். ஆனால் சிறுமி சொன்ன அடையாளத்தில் யாரையும் காணவில்லை. இதனால் பெற்றோர்கள் பிரச்சனை இல்லை என விட்டுவிட்டனர்.
 
மீண்டும் அந்த முதியவர் அந்த சிறுமியிடம் அதேபோல் கூறியுள்ளார். ஆனால் அந்த சிறுமி இந்த முறை வீட்டில் கூறாமல் இருந்துள்ளார். பின்னர் மீண்டும் சிறுமி வசிக்கும் தெருவுக்கே அந்த முதியவர் வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி அச்சத்தில் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
 
இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பள்ளி அருகே மறைந்து நின்று, அந்த முதியவர் சிறுமியின் பேச சென்ற போது பிடித்து ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த முதியவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் என்பது தெரியவந்தது.
 
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.