புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 26 ஜூலை 2018 (18:09 IST)

மாங்காடு அருகே பள்ளி பேருந்தில் சிறுமியிடம் சில்மிஷம்; உதவியாளரை அடித்து உதைத்த பெற்றோர்கள்!

மாங்காடு அருகே பள்ளி பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்த உதவியாளரை பெற்றோர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாங்காடு அருகே உள்ள ஒமேகா இண்டர்நேஷனல் பள்ளியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 
 
பெரும்பாலான மாணவ - மாணவிகள் பள்ளி பேருந்தில்தான் வந்து செல்கின்றனர்.
 
இன்று காலை கொளப்பாக்கத்தை சேர்ந்த எல்.கே.ஜி மாணவி ஒருவர் பள்ளி பேருந்தில் செல்ல மறுத்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் விசாரித்த போது பஸ் உதவியாளர் பாஸ்கர் சிறுமியிடம் செய்தது தெரியவந்தது.
 
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியாளர் பாஸ்கரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். 
 
இதுகுறித்து தகவல் அறிந்த மற்ற மாணவ-மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த சம்பவம் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.