வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வியாழன், 26 ஜூலை 2018 (07:44 IST)

17 பேர்களையும் அடையாளம் காட்டிய சிறுமி: விரைவில் தண்டனை கிடைக்குமா?

சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் 11 வயது சிறுமியை 17 பேர் கடந்த ஏழு மாதங்களாக பாலியல் வன்புணர்வு குற்றத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் சமீபத்தில் 17 பேர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 பேர்களையும் அடையாளம் காட்டும் அணிவகுப்பு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நேற்று நடந்தது.
 
பலத்த பாதுகாப்புடன் பெற்றோர்களுடன் அழைத்து வரப்பட்ட சிறுமி புழல் சிறையில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்த 17 பேர்களையும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அடையாளம் காட்டினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் வேறு சிலரும் நிறுத்தப்பட்டிருந்தாலும் சிறுமி சரியாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர்களையும் அடையாளம் காட்டினார். 
 
இதனையடுத்து 17 பேர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். 17 பேர்களையும் சிறுமி சரியாக அடையாளம் காட்டிவிட்டதால் இந்த வழக்கின் விசாரணை விரைவில் முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.