1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஜூலை 2018 (08:19 IST)

சிறுமிகளை கற்பழிக்க முயன்ற முதியவர் - மர்ம உறுப்பை கடித்துக் குதறிய நாய்

வீட்டில் தனியாக இருந்த சிறுமிகளை கற்பழிக்க முயன்றவரின் மர்ம உறுப்பை வளர்ப்பு நாய் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அர்கானஸ் மாகானத்தில் ஜேம்ஸ் என்பவர் தனது மனைவி, 3 மற்றும் 6 வயது மகள்களுடன் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் கணவன் மற்றும் மனைவி வேலைக்கு சென்று விட்டனர். அவர்களின் இரு பிள்ளைகளும் பள்ளி முடிந்து வீட்டில் ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்தனர்.
 
அப்போது அவர்களது வீட்டினுள் நுழைந்த முதியவர் ஒருவர் அந்த சிறுமிகளை கற்பழிக்க முயன்றுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமிகள் அலறினர். உடனடியாக வந்த அவர்களின் வளர்ப்பு நாய் அந்த முதியவரை கடுமையாக தாக்கியது. அவரின் மர்ம உறுப்பை கடித்துக் குதறியதோடு அதனை தின்றும்விட்டது.
 
இதனையடுத்து வலியால் துடித்த முதியவர் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த முதியவரை சிகிச்சைக்கு பின் கைது செய்ய உள்ளனர்.
 
சரியான நேரத்தில் எஜமானர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றிய நாய்க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.