வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (16:01 IST)

50 மணி நேரத்துக்கு மேலாக நீடிக்கும் மீட்பு பணி - நிலவரம் என்ன?

பாறைகளுக்குள் சிக்கி உள்ள மேலும் 2 பேரை மீட்கும் பணி இன்று 3வது நாளாக நடைபெறுகிறது. 

 
திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே 14 ஆம் தேதி திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஆயர்குளத்தை சேர்ந்த முருகன் (வயது 23) மற்றும் இளையார்குளத்தை சேர்ந்த செல்வன் (வயது 25) ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தி கிடைத்துள்ளது.
 
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக அரசின் சார்பாக தலா பத்து லட்சம் ரூபாயும், தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ஐந்து லட்சமமும் என மொத்தம் 15 லட்சம்  வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 
இதைத்தொடர்ந்து பாறைகளுக்குள் சிக்கி உள்ள மேலும் 2 பேரை மீட்கும் பணி இன்று 3வது நாளாக நடைபெறுகிறது. அதே நேரத்தில் பாறைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் ஒழுகி வருவதால் மீட்டு பணியில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள இருவரை மீட்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.