திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 15 மே 2022 (18:15 IST)

கல்குவாரி விபத்து: 17 மணி நேர போராட்டத்திற்கு ஒருவர் உயிருடன் மீட்பு!

kalguvari
கல்குவாரி விபத்து: 17 மணி நேர போராட்டத்திற்கு ஒருவர் உயிருடன் மீட்பு!
நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்தில் 17 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
நெல்லையில் உள்ள கல்குவாரி ஒன்றில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததை அடுத்து அங்கு பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இதனை அடுத்து மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் களத்தில் இறங்கி ஏற்கனவே இரண்டு பேரை உயிருடன் மீட்டனர். இந்த நிலையில் 17 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மேலும் ஒருவரை உயிருடன் மீட்டதாகவும் தற்போது மீட்கப்பட்ட செல்வம் ராஜேந்திரன் மற்றும் முருகன் ஆகிய மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன