வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (10:47 IST)

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களை பிடிக்க தனிப்படை: தமிழகத்தில் இதுதான் முதல்முறை!

தமிழகத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க என ஏற்கனவே தனிப்படை இருந்துவரும் நிலையில் தற்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது 
 
இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களை ஆண் காவல்துறையினர் விசாரிப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. எனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்கள் எச்சரிக்கை மட்டும் செய்யபட்டது.
 
இந்த நிலையில் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு தனிப்படையிலும் ஒரு பெண் ஆய்வாளர் அவரது தலைமையில் ஒரு தலைமை காவலர் மற்றும் இரண்டு காவலர்கள் இருப்பார்கள் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
 
இந்த தனிப்படையினர் சென்னை முழுவதும் ரோந்து சுற்றி வருவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் இரவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்கள் இந்த தனிப்படை இடம் சிக்கினால் அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது