புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2019 (16:47 IST)

மது குடித்துவிட்டு... வெடிகுண்டு வீசிய நபர்கள்... சிசிடிவி காட்சி வெளியீடு !

புதுச்சேரி  மாநிலத்தில் தனியார் மதுபானக் கடையில்  மது அருந்திவிட்டு, காசாளர் பணம் கேட்டதற்கு தகராறு செய்து, நாட்டு வெடிகுண்டு வீசிய 3 பேரை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் திருவண்டார் கோயில்  பகுதியில் ஒரு தனியார் மதுபானக் கடை இயங்கி வருகிறது.இங்கு நேற்று இரவு வந்த இளைஞர்கள் மூன்று பேர் மருத்து அருந்தியுள்ளனர். அதன்பின், அவர்களிடம் ஊழியர்கள் பணம் கேட்டதற்கு  மூவரும் தகராறு செய்துள்ளனர்.
 
பின்னர், இரு தரப்பினருக்கும் வாக்குவாதக் முற்றியுள்ளது. இதையடுத்து, கடைக்கு வெளியில் வந்த மூவரும் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
 
இதுகுறித்த புகாரின் அடிப்படையில்,  போலீஸார் வழக்கிப் பதிவு செய்து மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.