குடியுரிமை மசோதா ஆதரவு எதிரொலி: முக்கிய பதவில் இருந்து முகமது ஜான் நீக்கம்!
ராணிப்பேட்டை அனைத்து ஜமாத் காப்பாளர் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.பி. முகமது ஜான் நீக்கம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த திங்களன்று மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு 300 எம்பிக்களுக்கு மேல் ஆதரவும் 80 எம்பிக்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறிய இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா நிறைவேறி விடும் என்றே கணிக்கப்பட்டது.
அதன்படி இந்த மசோதாவுக்கு ஆதரவாக 117 வாக்குகளும் எதிர்த்து 92 வாக்குகள் பதிவானது. இதனை அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழகர்கள் இஸ்லாமியர்கள் இணைக்கப்படாததாலும், மத நல்லினத்திற்கு எதிரானது என தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதோடு அதிமுக இந்த குடியுரிமை மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருந்து இருந்தால் இது தோல்வியில் முடிந்திருக்க கூடும்.
இந்நிலையில், மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் ராணிப்பேட்டை அனைத்து ஜமாத் காப்பாளர் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.பி. முகமது ஜான் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த முடிவை ஜமாத் உறுப்பினர்கள் ஒருமனதாக எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.