1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 28 நவம்பர் 2024 (07:21 IST)

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
 
குறிப்பாக, கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில், நடிகர் அஜித் தனது வாழ்த்துகளை உதயநிதி ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளார். அஜித் இதுவரை எந்த பிரபல தலைவர்களுக்கும் வாழ்த்து சொல்லாத நிலையில், உதயநிதிக்கு மட்டும் வாழ்த்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அது மட்டும் அல்லாமல், நேற்று அஜித் கார் ரேஸ் போட்டிக்கு தயாரான புகைப்படம் வெளியான நிலையில், அந்த புகைப்படத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோ இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
ஒரு பக்கம் விஜய் "தமிழக வெற்றிக்கழகம்" என்ற அரசியல் கட்சியை தொடங்கி, திமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் அஜித், திமுகவின் முக்கிய தலைவரும் துணை முதல்வருமான உதயநிதிக்கு வாழ்த்து கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva