புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 24 மே 2021 (17:47 IST)

2011க்கு முன்பு படித்த கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு: தேதியை அறிவித்த அமைச்சர்

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை 10 ஆண்டுகளுக்கு பிடித்துள்ள திமுக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
குறிப்பாக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர்கள் எடுக்கும் அதிரடி முடிவுகள் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது 
 
இந்த நிலையில் நீண்ட கால கோரிக்கையான 2011ம் ஆண்டுக்கு முன் படித்த கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு எழுதும் வசதி வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அது குறித்த அறிவிப்பை தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் படித்த கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு ஜூன் 21-ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் இன்று முதல் வரும் ஜூன் 3-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரியர் வைத்துள்ள 2011ஆம் ஆண்டுக்கு முந்தைய மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.