திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 மே 2021 (14:51 IST)

12ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடக்கும்! – அன்பில் மகேஷ் திட்டவட்டம்!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதலாகவே பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வருகின்றனர். முன்னதாக கடந்த சில மாதங்கள் முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பரவியதால் மீண்டும் மூடப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதமே நடந்து முடிந்திருக்க வேண்டிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா, தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இன்னமும் நடத்தி முடிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பேசியுள்ள கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் “தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகே பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்படும். மாணவர்கள் நலன் கருதி நிச்சயமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும்” என கூறியுள்ளார்.