வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (12:55 IST)

''17 மாடி ஜெயின் வெஸ்ட்மின்ஸ்டர்'' கட்டிடம் இடிந்து விழும் அபாயம்...பீதியில் மக்கள்

jain Westminster
ஜெயிண்ட் சென்னை சாலிகிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயிண்ட் ஹவுசிங் அன்ட் கன்ஸ்ட்ரக்சன்ஸ் லிமிட்டட் என்ற  நிறுவனம் சார்பில்  17 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டியது.

ஏ,பி. சி என மூன்று பிளாக்களில் மொத்தம் 640 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், சுமார் 450க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனை செய்யப்பட்டு விட்டன.

கவர்ச்சியான விளம்பரம் மூலம் மக்களைக் கவர்ந்து மக்களிடம் தரமற்ற பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்த வீட்டை விற்றுள்ளனர். இதை  நம்பி பலநூறு பேர் இங்கு வீட்டை வாங்கியுள்ளனர்.

அதன்பின்னர், சில ஆண்டுகளில், வீட்டில் உள்ள சுவற்றில் விரிசல், சிமெண்ட் பூச்சு உதிர்ந்துவிடுதல், தூண்கள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

குழந்தைகள், முதியோருடன் இந்த ஆபத்தான கட்டிடத்தில் வசித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அச்சத்துடன் வாழ்கின்றனர். இந்தக் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி ஜெயிண்ட் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனம் மீது இந்த வீட்டுகளை வாங்கியோர் புகார் அளித்துள்ளனர்.