திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 23 மே 2023 (17:48 IST)

இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை...கணவர் போலீஸில் சரண்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தர்காவில் இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

நெல்லை மேலப்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மகபூப்ஜான். இவரது மகன் இம்ரான் கான்(32). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இவருக்குத் திருமணமாகி ஹைசீனா பேகம்(28) என்ற மனைவியும் அபியா என்ற மகளும், அசரத் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், கணவன் -மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஹசீனா பேகம் தன் கணவரை விட்டுப் பிரிந்து, நெல்லை டவுனில் முகமது அலி தெருவில் உள்ள தன் தாயார் பாத்திமா பேகம் வீட்டிற்குக் குழந்தைகளுடன் சென்றார்.

நேற்று மதியம் இம்ரான் கான் தன் மனைவியைப் பார்ப்பதற்காக டவுனுக்குச் சென்றார். அங்கு மாமியார் வீட்டிற்குச் சென்று தன் மனைவியுடன் பேசிவிட்டு சாப்பிட்டுள்ளார். அதன்பின்னர், தொழுகை நடத்த செல்வோம் என்று மனைவியிம் கூறினார் இம்ரான்கான்.

இருவரும் சேர்ந்து தர்காவுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர். அப்போது, தான் மறைத்திருந்த கத்தியை எடுத்து, ஹசீனாவின் வயிற்றில் குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இம்ரான் கான் ரத்தம் தோய்ந்த கத்தியுடன் காவல்  நிலையத்தில் சரணடைந்தார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.