சனி, 23 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 16 மே 2023 (23:41 IST)

ஐபிஎல்-2023; பாண்ட்யா ,மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடி ஆட்டம்..மும்பை அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்!

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக லக்னோ ஜெயிண்ட் அணி விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்  பவுலிங் தேர்வு செய்தது.

எனவே முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில்  காக் 16  ரன்னும், பாண்ட்யா 49 ரன்னும், மார்கஸ் ஸ்டோனிஸ் 89 ரன்னும் அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்து, மும்பை அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

மும்பை அணி தரப்பில், ஜேசன் 2 விக்கெட்டும், அகாஸ் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தற்போது பேட்டிங் செய்து வரும் மும்பை அணி, விக்கெட் இழப்பின்றி   6 ஓவரில் 58 ரன்னுடன் விளையாடி வருகிறது.