திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 மே 2021 (15:21 IST)

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும்! – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் கோடைக்காலம் நடத்து வரும் நிலையில் 13 மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடைக்காலத்தால் வெப்பம் அதிகரித்துள்ளது. இடையே டவ்தே மற்றும் யாஸ் புயல்களால் பல பகுதிகளில் மழை பெய்து வெப்பநிலை சற்று குறைந்திருந்தது.

தற்போது மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மதுரை, திருச்சி, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.