இன்று 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! – ஆன்லைனில் எப்படி பார்ப்பது?
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து முடிந்த தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியாகின்றன.
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு முதலாக மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் 10,11,12ம் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து நேரடியாக பொதுத்தேர்வு நடைபெற்றது.
இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியான நிலையில், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ஆன்லைனில் வெளியாகிறது. இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பார்க்கலாம்.