செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (14:53 IST)

இன்று 5 மாவட்டங்களில் கனமழை!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக வெயிலின் வெப்பம் காரணமாக சென்னை மக்கள் தத்தளித்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான தட்ப வெட்பம் தற்போது இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 
 
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.