வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (12:14 IST)

வைரஸ் காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டில் முன்கூட்டியே தேர்வு நடத்தப்படுகிறதா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. மேலும் வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே இறுதி தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே தற்போது பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரைவிலான மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தின் இரண்டாஅவது வாரமே ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும் ஆனால் தற்போது வைரஸ் காய்ச்சல் காரணமாக முன்கூட்டியே தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. 
 
ஒன்று முதல் ஒன்பது வகுப்புகளுக்கு ஏப்ரல் 24 முதல் 30 வரை தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் இரண்டாவது வாரமே தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran