திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 15 மார்ச் 2023 (10:52 IST)

புதிய வைரஸ் பரவல் எதிரொலி: நாளை முதல் 10 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை..!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் புதிய வைரஸ் பரவி வரும் நிலையில் நாளை முதல் 10 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை என புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என்றும் இதனால் மாஸ்க் அணிதல் உள்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என மதியம் மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. 
 
இந்த நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் வரும் 26 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை என மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
இதுகுறித்து புதுவை மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமசிவாயம் அவர்கள் கூறியபோது, ‘புதிய வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி மாணவர்கள் வெளியே சுற்றாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva