வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 மார்ச் 2021 (07:43 IST)

புதுவையில் பொதுத்தேர்வுகள் ரத்து: 1 முதல் 9 வரை மாணவர்கள் ஆல்பாஸ்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தற்போது புதுவையிலும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதுமட்டுமின்றி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து என்றும் அந்த மாணவர்கள் தேர்வு இன்ரி ஆல்பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது 
 
துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் இந்த அறிவிப்பு புதுவை மாநிலத்தின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் தேர்வை ரத்து செய்த ஆளுனருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது