1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 மார்ச் 2021 (16:13 IST)

நான் என்றைக்கும் கோபாலபுரத்து காவல்காரன்: ஜெகத்ரட்சகன் எம்பி அறிக்கை

திமுகவிலிருந்து ஜெகத்ரட்சகன் எம்பி விலகி பாஜகவில் சேர இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து நான் இதுகுறித்து ஜெகத்ரட்சகன் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
நேற்று முதல் சில சமூக வலைதளங்களில் சில தவறான செய்திகள் என்னை பற்றி பரப்பப்படுகிறது. எங்கள் கழகத் தலைவரும் குடும்ப தலைவருமாகிய தளபதி அவர்களை முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன் 
இன்று காலை கழக தலைவர் தளபதிகள் கட்டளையை சிரமேற்கொண்டு புதுவை மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து எங்கள் தோழமைக் கட்சியான காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு இருந்தேன் 
 
என் மீது சமூக வலைதளங்களில் வருகின்ற தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன். நான் என்றைக்கும் கோபாலபுரத்து காவல்காரன் என்று அவர் தெரிவித்துள்ளார்.