1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

மு‌ஸ்‌கி‌ன், ‌‌ரி‌த்‌தி‌க்கை கொ‌ன்றவனு‌க்கு மரண த‌ண்டனை - கோவை ‌நீ‌திம‌ன்ற‌ம் பரபர‌ப்பு ‌தீ‌ர்‌ப்பு

முஸ்கின்
கோவையில் அ‌க்கா‌ள், த‌ம்‌‌பி இரண்டு பேரையு‌ம் கடத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கு‌ற்றவா‌ளி மனோகரனு‌க்கு மரண த‌‌ண்டனை ‌வி‌தி‌த்து ‌மக‌ளி‌ர் நீ‌திம‌ன்ற‌ம் பரபர‌ப்பு தீர்ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

கடந்த 2010 ஆண்டு கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமி முஸ்‌‌கின், சிறுவன் ரித்திக் ஆகியோர் வாடகைக் கார் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவரால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டன.

போலீஸ் விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, மோகன்ராஜூம், அவரது நண்பர் மனோகரும் கைது செய்யப்பட்டனர். அக்காள், தம்பிகளான முஸ்‌கினும், ரித்திக்கும், அவர்களுக்கு நன்கு அறிமுகமான ஓட்டுநர்களாலேயே கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பியோட முயன்ற மோகன்ராஜ் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், 47 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட வழ‌க்‌கி‌ல் ‌நீ‌திம‌ன்ற இ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

கு‌ற்றவா‌ளி மனோகரனு‌க்கு மர‌ண த‌ண்டனை ‌வி‌தி‌த்து ‌கோவை ‌மக‌ளி‌ர் நீ‌திம‌ன்ற‌ ‌நீ‌திப‌தி சு‌ப்‌பிரம‌ணிய‌ன் பரபர‌ப்பு ‌தீ‌‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளா‌ர்.