பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்
WD
எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத் ஆகியோருடன் 100க்கும் மேற்பட்ட படங்களில் இடிச்சபுளி செல்வராஜ் நடித்து இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவுடன் இருந்த அவருக்கு, நேற்று திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.

