அமைச்சர்கள் கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி டிஸ்மிஸ் - செங்கோட்டையன் இலாகா மாற்றம்
அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, செங்கோட்டையன் இலாகாவை மாற்றி அமைத்துள்ளார். புதிய அமைச்சர்களாக என்.ஆர்.சிவபதி, முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோரை நியமித்துள்ளார்.
5வது முறையாக அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
முசிறி தொகுதி எம்.எல்.ஏ.யான என்.ஆர்.சிவபதி பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக நியமித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, அவருக்கு பள்ளிக்கல்வி, தொல்லியல், விளையாட்டு, இளைஞர் நலன், தமிழ் ஆட்சி மொழி மற்றும் கலாசாரம் ஆகிய இலாகாக்கள் ஒதுக்கியுள்ளார்.
செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ.யான என்.சுப்பிரமணியனை அமைச்சராக்கியுள்ள ஜெயலலிதா, அவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறையை ஒதுக்கியுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த கே.ஏ.செங்கோட்டையனுக்கு வருவாய்த்துறை ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா. அவருக்கு வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை கலெக்டர்கள், எடை மற்றும் அளவு, கடன் சட்டங்கள் மற்றும் நிவாரணம், சிட்பண்ட், கம்பெனிகள் பதிவு ஆகிய இலாகாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் இன்று மாலை 5 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவி ஏற்கிறார்கள்.