1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

‌3வது நாளாக த‌மிழக - கேரள எ‌ல்லை‌யி‌ல் பத‌ற்ற‌‌ம்

முல்லைப் பெரியாறு அணை
மு‌‌ல்லை‌ப் பெ‌‌ரியாறு அணை ‌பிர‌ச்சனை‌யா‌ல் நட‌ந்து வரு‌ம் வ‌ன்முறை காரணமாக த‌மிழக‌ம் - கேரளா எ‌ல்லை‌யி‌ல் ‌3வது நாளாக இ‌ன்று‌ம் பத‌ற்ற‌ம் ‌நீடி‌த்து வரு‌கிறது.

த‌மிழ‌ர்க‌ளி‌‌ன் கடைக‌ள், வாகன‌ங்க‌ள் தா‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் இருமா‌நில எ‌ல்லை‌யி‌ல் இ‌ன்னு‌‌ம் பத‌ற்ற‌ம் த‌ணிய‌வி‌ல்லை. க‌ம்ப‌த்‌தி‌ல் 3வது நாளாக கடைக‌ள், வ‌ணிக ‌நிறுவன‌ங்க‌ள் மூட‌ப்ப‌ட்டு‌ள்ளன. ப‌த‌ற்ற‌ம் ‌நீடி‌ப்பதா‌‌ல் ஐய‌ப்ப ப‌க்த‌ர்க‌ளி‌ன் வாகன‌ங்களு‌க்கு அனும‌தி மறு‌‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

சப‌ரிமலைக்கு செ‌ல்லு‌ம் த‌‌மிழக வாகன‌ங்க‌ள் குமு‌ளி வ‌ழியாக அனும‌தி‌க்க‌ப்படாததா‌ல் தேவனா‌ப்ப‌ட்டி, வ‌த்தல‌க்கு‌ண்டு உ‌ள்‌ளி‌ட்ட இட‌ங்க‌ளி‌‌ல் வாகன‌ங்க‌‌ள் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌னிடையே நிறு‌த்த‌ப்ப‌ட்ட வாகன‌ங்க‌ள் செ‌ங்கோ‌ட்டை வ‌ழியாக ‌‌திரு‌ப்‌பி அனு‌ப்‌ப‌ப்ப‌ட்டு‌ள்ளது. தவி‌‌க்கு‌ம் ப‌க்த‌ர்க‌ள் வச‌தி‌க்கு த‌னி க‌ட்டு‌ப்பா‌ட்டு அறையை த‌மிழக காவ‌ல்துறை‌யின‌ர் ‌திற‌ந்து உ‌ள்ளன‌ர்.

குமு‌ளி‌யி‌ல் '66வது மைல்' எ‌ன்ற இட‌த்த‌ி‌ல் க‌ட்டு‌ப்பா‌ட்டு அறையை த‌மிழக போ‌லீ‌சா‌ர் ‌‌திற‌ந்து உ‌ள்ளன‌ர். 09447474009, 04869 - 224252 எ‌ன்ற தொலைபே‌சி எ‌ண்‌ணி‌ல் தொட‌ர்‌பு கொ‌ண்டு ஐய‌ப்ப ப‌க்த‌ர்க‌ள் ‌விவர‌ங்களை தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று காவ‌ல்துறை கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது.

த‌மிழக - கேரள எ‌ல்லை‌யி‌ல் 3வது நாளாக பத‌ற்ற‌ம் ‌நிலவுவதா‌ல் குமு‌ளி, போடி மெ‌ட்டு, க‌ம்ப‌ம் மெ‌ட்டு ஆ‌கிய சோதனை சாவடிக‌ள் ‌தீ‌விரமாக க‌ண்கா‌ணி‌‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.