1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

பேருந்து கட்டணமும் கடும் உயர்வு

பஸ் கட்டணம்
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. பால் விலையும், மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளன.

மத்திய அரசு போதிய நிதி உதவி அளிக்காததால் இந்த கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 28 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 42 பைசா என்றும்; விரைவு, மற்றும் செமி டீலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 32 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 56 பைசா என்றும்; சூப்பர் டீலக்ஸ் மற்றும் சொகுசு புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 38 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 60 பைசா என்றும்; அல்ட்ரா டீலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 52 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 70 பைசா என்றும் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று, நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், சென்னை நீங்கலாக, இதர பகுதிகளில் தற்போதுள்ள குறைந்த பட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும்; சென்னை நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும்; அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.