மக்கள்நல பணியாளர்கள் 13,500 பேரை நீக்கினார் ஜெயலலிதா - அச்சத்தில் சாலைப்பணியாளர்கள்
தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேரை முதலமைச்சர் ஜெயலலலிதா மீண்டும் வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இவ்வாறு இவர்களை ஜெயலலிதா பணி நீக்கம் செய்வது 3வது முறை.
ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலளர் என்.எஸ். பழனியப்பன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ஊராட்சிகளில் அடிப்படை தகவல்கள் பராமரிப்பு, ஊராட்சி சொத்துகளைப் பாதுகாப்பது, சிறுசேமிப்பில் மக்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பணி நியமனம் குறித்த உத்தரவு அவ்வப்போது நீடிக்கப்பட்டு வந்துள்ளது. 21.5.2010-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி இந்த நியமனங்கள் 31.5.2012 வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தற்போது மக்கள் நலப் பணியாளர்கள் செய்து வரும் பணிகளைக் கவனிக்க ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகள் அளவிலேயே போதுமான அலுவலர்கள் இருப்பதால், மக்கள் நலப் பணியாளர்கள் என்ற பதவியை ரத்து செய்துவிடலாம் என்று 6.9.2010-ல் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஆணையாளர் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதை அரசு கவனமாகப் பரிசீலித்து, மக்கள் நலப் பணியாளர் பதவிகளை உடனடியாக ரத்து செய்வது என்று முடிவு செய்துள்ளது. இந்தப் பணியிடங்கள் உடனடியாக ரத்து செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு ஊரக வளர்ச்சித் துறை ஆணையாளரும், மாவட்ட ஆட்சியாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1999ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கப்பட்டனர். 1996ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் மக்கள்நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
2001ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் நீக்கப்பட்டனர். 2006ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் மக்கள்நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
2009ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆறாவது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாதம் ரூ.2,500 என்ற அளவில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் அளிக்கப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் அடுத்த இலக்கு நாங்களாக இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் 10 ஆயிரம் சாலைப்பணியாளர்கள்.