தமிழக அமைச்சர் கருப்பசாமி மரணம்
webdunia photo
WDநெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கருப்பசாமி. கால்நடைத்துறை அமைச்சராக இருந்த கருப்பசாமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதனால் அவரது இலாகா மற்றொரு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இலாகா இல்லாத அமைச்சராக கருப்பசாமி நீடித்து வந்தார்.
இந்த நிலையில் ரத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த கருப்பசாமி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி கருப்பசாமி இறந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கருப்பசாமி, அ.தி.மு.க.வில் அமைப்பு செயலராகவும், ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார்.
